×

2012ம் ஆண்டுக்கு பின்னர் தோன்றிய தெருக்களின் விவரங்கள் சேகரிப்பு மாவட்ட பதிவாளர், கமிஷனருடன் ஆலோசனை வேலூர் மாநகராட்சி உட்பட தமிழகத்தில்

வேலூர், மே.3: வேலூர் மாநகராட்சி உட்பட தமிழகத்தில் 2012ம் ஆண்டுக்கு பின்னர் தோன்றிய தெருக்களின் விவரங்கள் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்ட பதிவாளர், மாநகராட்சி கமிஷனர் ஜானகியுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு முழுவதும் அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து என்று அனைத்து பகுதிகளுக்கான தெருக்களின் விவரங்கள் உட்பட அனைத்து உள்ளது. இந்த விவரங்கள் கடந்த 2012ம் ஆண்டு வரை மட்டுமே பதிவுத்துறையில் உள்ளது. எனவே, பதிவுத்துறையில், புதிய தகவல்களை பதிவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் மாவட்ட பதிவாளர் சுடரொலி அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்கள் மூலம், 2012க்கு பின்னர் உள்ள தெருக்களின் விவரங்கள் பதிவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேலூர் மாநகராட்சியில் கடந்த 2012ம் ஆண்டுக்கு பின்னர் புதியதாக எத்தனை தெருக்கள் உருவானது. அதன்பெயர், விவரங்கள் போன்ற தகவல்களை சேகரிக்க மாவட்ட பதிவாளர் சுடரொலி, மாநகராட்சி கமிஷனர் ஜானகியுடன் ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து வேலூர் மாவட்ட பதிவாளர் சுடரொலி கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் கடந்த 2012க்கு பின்னர் தோன்றிய தெருக்களின் விவரங்கள் ஒட்டுமொத்தமாக சேகரித்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. இதற்காக அதன் விவரங்கள் சேகரிக்க கமிஷனருடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. விவரங்கள் கிடைத்தவுடன் மாநகராட்சி விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றப்படும். ஏற்கனவே பேரூராட்சி விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. தற்போது மாநகராட்சி, நகராட்சி தெருக்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது, என்றார்.

The post 2012ம் ஆண்டுக்கு பின்னர் தோன்றிய தெருக்களின் விவரங்கள் சேகரிப்பு மாவட்ட பதிவாளர், கமிஷனருடன் ஆலோசனை வேலூர் மாநகராட்சி உட்பட தமிழகத்தில் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Vellore Corporation ,Vellore ,District Registrar ,Janaki ,Dinakaran ,
× RELATED வேலூர் மாநகராட்சி சர்கார் தோப்பில் ₹68...